கோவையில் 128 மையங்களில் 11ம் வகுப்புத் பொதுத் தேர்வு
பைல் படம்.
தமிழகம் முழுவதும் 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று துங்கியது. இந்த பொதுத்தேர்வு அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று (14.03.2023) மொழித்தேர்வு நடைபெற்றது. அதன்படி கோவை மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்தம் 128 மையங்களில் துவங்கியது. மேலும் மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 பேர் எழுதினர். தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவுறை வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி அனைத்து மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்தந்த மையங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்வு அறை எண், தேர்வர்கள் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீசை பார்த்து விட்டு தேர்வு அறைகளுக்குள் சென்றனர்.
உடமைகளை சோதனை செய்த பின்னரே மாணவர்களை அறை கண்காணிப்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வை ஆர்வத்துடன் எழுதினர்.
இந்த தேர்வ 1.15 மணிக்கு முடிவடைந்தன. தேர்வில் காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 180 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 128 முதன்மை கண்காணிப்பாளர்கள், 138 துறை அதிகாரிகள், 1,800 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu