கோவை மாநகராட்சியில் நாளை 31 மையங்களில் தடுப்பூசி போடப்படும் - மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சியில் நாளை 31 மையங்களில் தடுப்பூசி போடப்படும் - மாநகராட்சி நிர்வாகம்
X
கோவை மாநகராட்சியில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் கோவிஷில்ட் தடுப்பூசி போடப்படும்.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் கோவிஷில்ட் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு மையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் 31 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிருந்தவன் நகர் நடுநிலைப் பள்ளி, விளாங்குறிச்சி தர்மசஸ்தா மேல்நிலைப்பள்ளி, நெசவாளர் காலணி மாநகராட்சி பள்ளி, நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளி, எஸ்.ஐ.ஹெச்.எஸ் மற்றும் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!