விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு
X

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன். இவர் மீது மன்றத்தினர் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவர் மன்றத்தில் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஆனார். விஜய் மன்றத்திற்கு புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்லி ஆனந்த் பொறுப்பேற்றார்.

அதே சமயம் விஷால் ரசிகர்களை ஒருங்கிணைத்து, விஜய்க்கு இணையாக கொண்டு போகவேண்டும் என்று பெரும் முயற்சிகளை எடுத்துவந்தார் ஜெயசீலன். இதற்கிடையில் விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் கட்சி ஆரம்பிப்பதில் தகராறு ஏற்பட்டு, அவர்களும் ரசிகர்களும் இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயசீலன், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், புஸ்லி ஆனந்த் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறார் என்றும், சாதி அடிப்படையில் தான் அவர் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்கிறார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

ஜெயசீலனின் இந்த பேச்சினால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்றும், அதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மனு கொடுத்திருக்கிறார்கள்.

Next Story