மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : கோவை செல்வராஜ்

அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சி குறித்து தொடர்ந்து பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் 1970ஆம் ஆண்டில் மின்கட்டனத்தை குறைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சுட்டு படுகொலை செய்தது அதிமுக ஆட்சியில்தான் என்று வரலாறு தெரியாமல் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் அரங்கேறியது கருணாநிதி தலமையிலான திமுக ஆட்சியில் தான் என்று அவர் கூறினார்.
தன்னை நோக்கி கேள்வி கேட்கும் ஒரு பெண்ணிடம் முறையாக பதில் கூட சொல்ல தெரியாத அளவிற்கு நாகரிமாக செயல்படும் ஸ்டாலின் எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என்று செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.
முக அழகிரி சொல்வதைப்போல ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்று கூறிய அவர் அதிமுக அரசின் திட்டங்களை கூறி பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அவரின் இம்முயற்சிக்கு சரியான பலன் வந்து சேரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu