குரூப் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க மாற்றங்கள்

குரூப் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க  மாற்றங்கள்
X

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் பேட்டியின் போது கூறினார்.

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பேசியதாவது,இதற்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக அறிந்து அதன் அடிப்படையில் ஓ.எம்.ஆர். ஷீட்டுகளில் பல்வேறு புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதப்படும் போது தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது தேர்வு மையங்களிலேயே தனியாக பிரிக்கப்பட்டு, தேர்வு விடைத்தாள் மட்டுமே தனியாக வேறொரு கவர்களில் வைக்கப்படும்.

யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர்., ஷீட்டுகளை மாற்ற முடியாத படி, ஓ.எம்.ஆர்., ஷீட் மாற்றியமைக்கப்படும். இதற்கு முன்னர் ஓ.எம்.ஆர்., ஷீட்களின் பட்டியலின் மேற்பகுதியில் உள்ள விவரங்கள் ஷீட்களின் ஓரப்பகுதியில் கொண்டு வரப்பட்டு, அதை கிழித்து வைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பது போன்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். ஓ.எம்.ஆர்., தான் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால், தேர்வர்களின் கட்டை விரல் ரேகை பெறப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வர்களுக்கும் வெவ்வேறு விதமான சீரியல் எண் கொண்ட கேள்வி தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு