ஆட்சியர் அலுவலகம் முன் நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி கோவையில் பரபரப்பு

ஆட்சியர் அலுவலகம் முன் நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி கோவையில் பரபரப்பு
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூர் குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி முருகம்மாள்(97).இத்தம்பதியினருக்கு மூன்று மகள் மன்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் ரங்கசாமி விவசாய நிலத்திற்க்கு மின் இணைப்பு தர வேண்டும் என கூறி பத்திரத்தை பெற்றுள்ளார். 25 செண்ட் இடத்தை தன் பெயருக்கு மாற்றி கொள்வதாக கூறிய ரங்கசாமி மொத்தம் உள்ள 13 ஏக்கர் நிலத்தையும் தன் பெயருக்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ரங்கசாமி 10 மாதங்களுக்கு இறக்கவே வாழ்வாதாரம் இன்றி தவித்த முருகம்மாள் சொத்து பத்திரத்தை மருமகளான பாப்பாத்தியிடம் கேட்டு உள்ளார். இதனை மருமகள் தர மறுத்த நிலையில் தான் வஞ்சிக்கபட்டதாக கூறி முருகம்மாள் பாட்டி தனது மகள்களான மாராத்தாள், லட்சுமி,பாப்பாத்தி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த அவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டனர்.இன்று மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மூதாட்டிகளின் இந்த செயலை கண்ட அவர்கள் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அன்னூர் தாசில்தார் சந்திரா உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி உள்ளார்.மூதாட்டிகள் நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!