புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் - இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 133 பேர் கண்காணிப்பு

இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 133 பேர் கோவை மாவட்டத்திற்கு வந்திருப்பது தெரியவந்தது.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 133 பேர் கோவை மாவட்டத்திற்கு வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தற்போது வரை இங்கிலாந்தில் இருந்து வந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 33 பேருக்கும் பரிசோதனை செய்ய உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!