புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 4 பேர் தனிமைப்படுத்தல்

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 4 பேர் தனிமைப்படுத்தல்
X

இங்கிலாந்திலிருந்து கோயமுத்தூர் வந்த 4 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கடந்த வாரம் சென்னை வழியாக விமானம் வழியாக 4 பேர் கோவைக்கு வந்தனர். கோவை மாநகர பகுதியை சேர்ந்த 3 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ள நிலையில், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை சுகாதாரத் துறையினர் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதி வழியாக கோவை வரும் பயணிகளையும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!