இழப்பீடு தராவிட்டால் பல்கலைகழகத்தில் குடியேறுவோம்: நடராஜன் எம்.பி., பேட்டி

இழப்பீடு தராவிட்டால் பல்கலைகழகத்தில் குடியேறுவோம்:  நடராஜன் எம்.பி., பேட்டி
X

நிலத்திற்குரிய உரிய இழப்பீடு தராவிட்டால் குடும்பத்துடன் பல்கலைகழகத்துடன் குடியேறுவோம் என கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடராஜன் எம்.பி பேசினார்.

கோயமுத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிலத்திற்கான பணம் மற்றும் வேலை இதுவரை வழங்கப்படவில்லை என தெரிகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வித இழப்பீடும் கிடைக்கப்பெறவில்லை என பாரதியார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு பி.ஆர்.நடராஜன் எம்.பி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகையில், எம்ஜிஆர் காலத்தில் பல்கலைக்கழகங்கள் நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாயிகளிடமிருந்து நிலமானது வாங்கப்பட்டது. அதன்படி கோவையிலும் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்துவதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது.

அப்போதைய நேரத்தில் அரசு வழங்குவதாக கூறிய விலை குறைவாக உள்ளது என்றும் அதை அதிகரித்து தர வலியுறுத்தியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அதை விசாரிக்காமல் இன்று வரை காலம் தாழ்த்தி வருவதாகவும் உடனடியாக விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை தரவேண்டும் . இல்லையென்றால் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் ஆடு மாடுகளுடன் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!