/* */

கோவை அருகே யானை தாக்கியதில் மிதிவண்டியில் சென்ற முதியவர் உயிரிழப்பு

பன்னிமடை - வரப்பாளையம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவரை யானை துரத்தி தாக்கியது. அதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் ஆல்பா, பீட்டா, காமா என மூன்று சிறப்பு படைகள் அமைத்து யானைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு கோவை பன்னிமடை அடுத்த ஸ்ரீ நகர் பகுதியில் 3 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. சோளப்பயிர் மற்றும் வாழை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளதால் மேய்ச்சலுக்கு யானைகள் வந்ததாக தெரிகிறது. அப்போது பன்னிமடை - வரப்பாளையம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவரை யானை துரத்தி தாக்கியது. அதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த 63 வயதான சோமசுந்தரம் என்பது தெரியவந்தது.

Updated On: 16 Dec 2020 6:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க