கோவையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்

கோவையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்
X
ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல் துறை தடுத்ததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல் துறை தடுத்ததால் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

அப்போது மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்

Tags

Next Story