துறைமுகம் அமைக்க தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை -கேரளஅமைச்சர் கோரிக்கை
கன்னியகுமாரி அருகே கேரள எல்லையில் விழிஞம் பகுதியில் கேரள அரசு சிறு துறைமுகம் அமைக்க உள்ளது, இது குறித்து தமிழக அரசின் ஒத்துழைப்பு வழங்க கேரளா மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவை சந்தித்து கடிதம் வழங்கினார்
கன்னியகுமாரி அருகே கேரள எல்லையில் விழிஞம் பகுதியில் கேரள அரசு சிறு துறைமுகம் அமைக்க உள்ளது, இது குறித்து தமிழக அரசின் ஒத்துழைப்பு வழங்க கேரள சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவை சந்தித்து கடிதம் வழங்கினார்
சந்திப்பு நிறைவுக்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரியில் இருந்து பாறைகளை எடுத்து செல்வது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை கடிதமாக பெற்றிருக்கிறேன் இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள்தான் செயல்படவேண்டும் என்பது தமிழகத்தின் நிலைபாடு.
துறை முகங்களை சீரமைப்பது தொடர்பாக மத்திய அரசின் சட்ட முன்வடிவை எதிர்ப்பது தொடர்பாக கேரளா, கர்நாடக உட்பட 9 மாநிலங்களுக்கு முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார்.
மாநில அரசின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் தமிழகம், கேரளாவின் நிலைபாடும் ஒன்றுதான் என்றார்.
பொருநை அருங்காட்சியகத்தின் தொடர்ச்சியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அகழ்வாய்வு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து இது குறித்த கேள்விக்கு கேரள அமைச்சர் அகமது கூறுகையில் தமிழகத்தைப் போல கேரளாவுக்கும் நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. தமிழகத்தின் சிறப்பும், கேரளாவில் சிறப்பும் எந்த குறைபாடும் இல்லாத வகையில் அகழாய்வு செய்ய அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும். சுற்றுலாவில் கேரளா முக்கியமான இடமாக திகழ்கிறது. அதை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பண்டைய காலத்தில் தமிழகத்திற்கும் கேரளாவிற்குமான தொடர்புகள் நிறைய இருக்கின்றது. அதை வெளிக்கொணர அகழ்வாய்வுக்கு முழு ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu