/* */

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு
X

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி 29.12.2022 அன்று ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு நாளை 29.12.2022 அன்று வருகை தர உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் முதல் அமைச்சருக்கு திருச்சி விமான நிலையத்தில் காலை சுமார் 9.30 மணியளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்த பின்னர் முதல் அமைச்சர் ஸ்டாலின் கார் மூலம் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் வருகிறார்.

அங்கு நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்று மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியும், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கியும், முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

அரசு விழா முடிவடைந்ததும் முதல் அமைச்சர் ஸ்டாலின் மணப்பாறை மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு-2ல் அமைந்துள்ள ஆலை விரிவாக்கத்தின் முதற்கட்டமாக உலகத்தரம் வாய்ந்த வன்மரகூழ் ஆலையை திறந்து வைத்தும், மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தும் பேசுகிறார்.

பின்னர் திருச்சி மணிகண்டம் அருகே சன்னாசிப்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் ஒரு கோடியே 1-ஆவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கி, பல்வேறு மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, சன்னாசிப்பட்டியிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்து பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முதல் அமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் சென்னை செல்லும் வரை மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் பாதுகாப்பு காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

மேலும் 29.12.2022 அன்று தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 30 Dec 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?