டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
CM Stalin Visit To Delta Districts குறுவை சாகுபடிக்காக சேலம் மேட்டூர் அணையை கடந்த 24ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு, ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
CM Stalin Visit To Delta Districts இந்நிலையில் இன்று மதியம் 12:30 மணியளவில் திருச்சி வந்தடையும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிடுகிறார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்யும் அவர், நாளை நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,தஞ்சாவூர் ,திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிய உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu