காலை உணவுத் திட்டம்: மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

காலை உணவுத் திட்டம்: மதுரையில்  முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
X
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை மதுரை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தபட்டு, 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி என வழங்கப்படவுள்ளது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்றும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்றும், புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் வழங்கப்படவுள்ளது.

நாளை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மதுரை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 துவக்கப்பள்ளிகளில் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4136 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள சமையல் அறைகள் வாயிலாக உணவுகள் கொண்டு செல்லப்படவுள்ளது. முதலமைச்சரின் வருகையால் சமையல் அறை பகுதியில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings