பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
X
பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் செப் 6ம் தேதியும், ஐதராபாத்தில் 8ம் தேதியும் நடைபெறவுள்ளது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சோபிதா துலிபாலா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரஹ்மான், விக்ரம் பிரபு,அஸ்வின் காக்கமனு, லால், பார்த்திபன், ரியாஸ் கான், மோகன்ராமன், அர்ஜுன் சிதம்பரம், பாபு ஆண்டனி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது.

முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அப்படத்தின் ட்ரெய்லரை அவர் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
ai and business intelligence