முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

CM Cell Petition Model
CM Cell Petition Model
சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கேட்டு அதிக மனுக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வருவதாக தெரிகிறது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் (தபால்/இணையதளம் (www.cmcell.tn.gov.in), முதலமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் (cmcell@tn.gov.in) போன்ற அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
முதல் படி :
cmcell.tn.gov.in என்ற இணைய முகவரியில் சென்று பார்த்தால் 'முதலமைச்சரின் தனிப்பிரிவு இணைய வழி கோரிக்கை மற்றும் பராமரிப்பு முறைமை' என்ற முகப்பு பக்கம் தெரியும். மொழி நம் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மோழைகளும் உள்ளன. ஆனால் வடிமைக்கப்பட்டது என்னவோ ஆங்கிலத்தில்தான். நமக்கு தமிழ் தேவை என்றால் `தமிழ் வடிவம்' என்ற ஆப்ஷனை 'க்ளிக்' செய்ய வேண்டும்.
பின்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவு என்ற ஆப்ஷனை 'க்ளிக்' செய்தால் மேலே நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்யவேண்டும்.முதலில் நாம் அளிப்பது முதல் மனு என்றால் நாம் புதியவர். ஆகவே `புதிய பயனாளர் பதிவு' என்ற ஆப்ஷனை 'க்ளிக்' செய்ய வேண்டும். ஏனெனில், நாம் இணையதளத்துக்குள் செல்வதற்கு நமக்கு தனி கணக்கு வேண்டும்.
`புதிய பயனாளர் பதிவு' என்பதை 'க்ளிக்' செய்ததும் ஒரு பட்டியல் விரியும். அதில் பெயர், பாலினம், தந்தை/ கணவர் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் முழுமையான முகவரி போன்ற விபரங்களை பதிவிட வேண்டும். அதைமுடித்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் `சேமி' என்ற ஆப்ஷனை 'க்ளிக்' செய்ய வேண்டும். பின்னர் நமக்கான லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு திரையில் தோன்றும். லாக்-இன் ஐடி என்பது நாம் உள்ளீடு செய்த நமது மெயில் ஐடிதான். அதனால் பாஸ்வேர்டை மட்டும் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
2ம் படி :
cm cell petition model in tamil-அதை முடித்து `உள் நுழைக' என்ற ஆப்ஷனை 'க்ளிக்' செய்ததும் நாம் உள்ளே நுழைய லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டைக் கொடுத்து உள்ளே நுழையலாம். பின்னர் `கோரிக்கை பதிவு' என்ற ஒரு பதிவு நம்மை வழிநடத்தும். அதில் ஏற்கெனவே நாம் அளித்திருந்த விபரங்கள் தெரியும். அதற்குக் கீழே `கோரிக்கை விபரம்' என்ற ஒரு பகுதி இருக்கும்.
இப்போது நாம் அதை நிரப்ப வேண்டும். முதலில் `கோரிக்கை வகை' என்ற ஆப்ஷன் இருக்கும் அதை 'க்ளிக்' செய்தால் ஒரு பட்டியல் வரும். அதில் பட்டா உரிமம், விருதுகள், அடிப்படை வசதிகள், முதலமைச்சர் நிவாரண நிதி, தீ விபத்துக்குப் பின்பான புகார், கோவிட்-19, வேலைவாய்ப்பு, நிதி உதவி, வெள்ள நிவாரண உதவி, பொதுவானவை எனப் பல்வேறு வகையான பிரிவுகள் இருக்கும்.
அந்தப் பட்டியலில் நாம் தரவிரும்பும் மனு எது தொடர்பானது என்பதைப் பொறுத்து, உரிய பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, `மேலே குறிப்பிட்டுள்ள தொடர்பு முகவரியும் பாதிக்கப்பட்ட முகவரியும் ஒன்றா?' என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அதில் ஆம்/இல்லைஎன்று இரண்டே வார்த்தைகள் மட்டும் இருக்கும். அந்த ஆப்ஷனில் எது சரியோ அதை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை `இல்லை' என்பதை செலக்ட் செய்தால் பாதிக்கப்பட்டோரின் முகவரியைப் பதிவிடுவதற்கு ஒரு புதிய பகுதி தோன்றும். அதில் நமது முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்.
அடுத்தது என்ன எழுதவேண்டும் என்ற பகுதி. `கோரிக்கை' என்ற பகுதியில்நமது புகாரை டைப் செய்ய வேண்டும். புகார் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பதும் %,&,$,@ போன்ற சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்தக்கூடாது. புகார் மனுவை `Unicode Font'-ல்தான் டைப் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். டைப் செய்த பிறகு, `சமர்ப்பி' என்ற ஆப்ஷன் இருக்கும் அதை 'க்ளிக்' செய்தால் உங்கள் புகார் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து நமது கோரிக்கை மனுவுக்கான எண் தோன்றும். அதைக் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

நமது மனுவின் நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்க்க அந்த புகார் மனுவின் எண் அவசியம். உங்கள் மனுவின் நிலையைப் பார்ப்பதற்கு அதே இணையதள முகவரிக்குச் சென்று லாக் இன் செய்து `கோரிக்கை நிலவரம்' என்ற ஆப்ஷனை 'க்ளிக்' செய்து நமது கோரிக்கை எண் மற்றும் கேப்சாவை உள்ளீடு செய்தால் நாம் கொடுத்துள்ள புகார் எந்த நிலை நடவடிக்கையில் இருக்கிறது என்பதை நாம் அறியமுடியும். அதன்மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu