வாரிசுகளை தெளிவுபடுத்துங்கள்... எஸ்.பி.ஐ., வங்கி மேலாளர் அறிவுரை

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளர் ரெங்கராஜன் பேசினார்.
தேனி மாவட்ட ஓய்வூ பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. தேனி எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளர் ரெங்கராஜன் பங்கேற்று பேசியதாவது: நானும் போலீஸ் துறையில் பணிபுரிந்தேன். என் தந்தையும் போலீஸ் துறையில் பணிபுரிந்தார். தற்போது எனது தம்பி போலீஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் எனக்கு போலீஸ் துறையின் அருமை தெரியும். ஓய்வு பெற்ற நீங்கள் அனைவரும் குறைந்தது 30 முதல் 35 ஆண்டுகள் இந்த நாட்டு மக்கள் பாதுகாப்புடன் வாழ கண்முழித்து பணியாற்றிய பெருமைக்கு உரியவர்கள் என்பதை நான் அறிவேன்.
உங்களின் ஓய்வுக்காலம் மிகவும் சிறப்புடன் அமைய வேண்டும். அதற்கு எஸ்.பி.ஐ., வங்கி சிறப்பான பல சேவைகளை வழங்கி வருகிறது. பென்சனர்களுக்கு கடன் தர மாட்டார்கள் என்ற தயக்கம் சிலருக்கு உண்டு. ஆனால் உண்மையில் பென்சனர்களின் நல்வாழ்வுக்கு ஏகப்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா வகை கடன்களும் வழங்கப்படுகின்றன. உலக அளவில் இந்திய வங்கித்துறை மிக, மிக வலுவான நிலையில் உள்ளது. இந்திய அளவில் எஸ்.பி.ஐ., வங்கி மிக, மிக சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக டெபாஸிட்தாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி 7.10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் பென்சன்தாரர்களுக்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த பணத்திற்கு எஸ்.பி.ஐ., வங்கி மிகச்சிறந்த பாதுகாப்பு வழங்குகிறது. உங்களுக்கான ஓய்வு கால வருமானத்தையும் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம் உங்கள் வாரிசு யார் என்பதை தெளிவாக உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான அத்தனை வசதிகளும் எஸ்.பி.ஐ., வங்கியில் உள்ளது.
உங்கள் சேமிப்பு பணம் உங்கள் காலத்திற்கு பின்னர் யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை நீங்கள் வாழும் போதே தெளிவுபடுத்தி விடுங்கள். அதுதான் உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை. வாரிசு யார் என்பதை தெளிவுபடுத்தாமல் விட்டால், எதிர்காலத்தில் அவர்களுக்கு உங்கள் சேமிப்பு பணம் கிடைக்க பல்வேறு சிரமங்கள் ஏற்படும். பல சிரமங்களுக்கு இடையே தான் அந்த பணம் வாரிசுகளுக்கு போய் சேரும். இந்த சிரமத்தை தவிர்க்க நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசோ, வங்கி நிர்வாகமோ, ஏன் கோர்ட் கூட உங்கள் பணத்தில் கை வைக்க முடியாத அளவு சிறப்பான சேமிப்பு திட்டங்கள் எஸ்.பி.ஐ., வங்கியில் உள்ளன. பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் இந்த இந்த திட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் எத்தனை வயதான முதியவராக இருந்தாலும் சேரலாம். எதிர்பாராத சட்ட நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், இந்த சேமிப்பில் கோர்ட் கூட தலையிட முடியாது. வாழ்வியல் நெருக்கடி நேரங்களில் இந்த சேமிப்பு பணம் உங்களுக்கு கை கொடுக்கும். அந்த அளவு சிறப்பான சேமிப்பு திட்டம் எஸ்.பி.ஐ., வங்கியில் உள்ளது. தற்போது பணிபுரிபவர்களுக்கு உங்களை போல் வாழ்நாள் பென்சன் அரசு வழங்கவில்லை.
அதனால் ஏற்படும் சிரமங்களை ஈடுகட்ட தேசிய பென்சன் திட்டத்தை எஸ்.பி.ஐ., வங்கி வழங்குகிறது. அதேபோல் பென்சன் தாரர்களாக இருந்தாலும், இதர அரசு பணிபுரிபவர்களாக இருந்தாலும், சாதாரண வாடிக்கையாளராக இருந்தாலும், ‘பெர்சனல் ஆக்ஸிடெண்ட் இன்சூரன்ஸ்’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே பிரிமியம் செலுத்த வேண்டும். இயற்கை மரணம் தவிர்த்த அத்தனை வகை மரணங்களுக்கும் இந்த திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும். இழப்பினை சந்தித்த குடும்பத்தை மீட்டெடுக்க இந்த பணம் நிச்சயம் உதவியாக இருக்கும். அதேபோல் வருமான வரி விலக்கு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. நீங்கள் எந்த சந்தேகம் என்றாலம் என்னை மொபைல் போனிலோ (62909 75814, 94742 22517) அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu