சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஐ. பரந்தாமன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
இன்று காலை முதல் புரசை வாக்கம், கொசப்பேட்டை,கொளத்தூர்,வில்லிவாக்கம் பகுதிகளை பார்வையிட்டேன். இன்று மாலை தென்சென்னையில் ஆய்வு செய்ய உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, தீணையப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.160 நிவாரண மையங்கள் உள்ளது. 44 மையத்தில் மக்கள் உள்ளனர்,
மாணவர்கள் நலன் கருதி சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுவர் அடுத்த இரு தினங்களுக்கு விடுமுறை 500 இடங்களில் பம்புகள் மூலம் தேங்கி இருக்கு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
1070 என்ற தொலை பேசியில் மாநில கட்டு பாட்டு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம், அரசு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் சூழந்துள்ள இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியில் 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்து விட்டார் என்பது குறித்து நான் பேசவில்லை.
நான் ஆட்சிக்கு வந்தவுடனே மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்தி உள்ளோம், நாங்கள் வந்ததில் இருந்து 50%. பணி செய்திருப்பது திருப்தி, மீதம் உள்ள 50% பணிகளை செய்ய உள்ளோம் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சென்னை திரும்ப முதல்வர் அறிவுறுத்தினார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு, மாணவர்களின் நலன் கருதி அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன் இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu