காப்பீட்டுத்திட்ட அட்டை டவுன்லோட் செய்வது எப்படி?

காப்பீட்டுத்திட்ட அட்டை டவுன்லோட் செய்வது எப்படி?
X
Chief Minister Health Insurance Card Download-முதலமைச்சர் காப்பீட்டுத்திட்ட கார்ட் டவுன்லோட் செய்யணுமா..? வாங்க பார்க்கலாம்.

Chief Minister Health Insurance Card Download-முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான (cmchistn) அட்டையை இன்னும் Download செய்யவில்லையா? கவலை வேண்டாம். மருத்துவ காப்பீட்டு அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்யணும் என்று பாப்போம் வாங்க.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (Chief Minister Comprehensive Health Insurance Scheme – CMCHISTN) ஏழை,எளிய மக்கள் எந்த கட்டணமும் இல்லாமல் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வருவாய் குறைந்த குடும்பங்கள் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை கட்டணமில்லாமல் பெற முடியும். தமிழக அரசு இந்த சுகாதாரத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தி வருகிறது.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் அதிகபட்சமாக Rs. 5,00,000 வரையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகளும், 154 தொடர் சிகிச்சை முறைகளும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளும் உள்ளன. இதில் பச்சிளங் குழந்தைளுக்கான சிகிச்சை முறைகளும் அடங்கும்.

காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்

முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அந்த நோய்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

chief minister health insurance card download

  1. BARIATRIC SURGERY எடை குறைப்பு அறுவை சிகிச்சை
  2. CARDIOLOGY இருதய நோய் சிகிச்சை
  3. CARDIOTHORACIC SURGERIES இருதய நோய் அறுவை சிகிச்சை
  4. DERMATOLOGY தோல் நோய் சிகிச்சை
  5. Diagnostic center நோய் கண்டறிதல் மையம்
  6. E N T காது மூக்கு தொண்டை சிகிச்சை
  7. Emergency Room Packages (Care requiring less than 12 hrs stay) அவசர சிகிச்சைகள்
  8. ENDOCRINE SURGERY நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை
  9. ENDOCRINOLOGY உட்சுரப்பி சிகிச்சை
  10. FOLLOW UP PROCEDURE பின் தொடர் செயல்முறை
  11. GASTROENTEROLOGY இரைப்பை குடல் சிகிச்சை
  12. GENERAL MEDICINE பொது மருத்துவ சிகிச்சை
  13. GENERAL SURGERY பொது அறுவை சிகிச்சை
  14. GENITOURINARY SURGERY இருபாலார் சிறுநீரக நோய் சிகிச்சை
  15. GYNAECOLOGY OBSTETRIC SURGERY மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் சிகிச்சை
  16. HEMATOLOGY இரத்தவகை சிகிச்சை
  17. HEPATOLOGY கல்லீரல் நோய் சிகிச்சை
  18. INFECTIOUS DISEASES – GENERAL MEDICINE தொற்று நோய் சிகிச்சை
  19. INTERVENTIONAL CARDIOLOGY இடையீடு இருதயவியல்
  20. INTERVENTIONAL RADIOLOGY இடையீடு இருதய சிகிச்சை
  21. MEDICAL ONCOLOGY புற்றுநோய் மருத்துவ சிகிச்சை
  22. NEONATOLOGY பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை
  23. NEPHROLOGY சிறுநீரக சிகிச்சை
  24. NEUROLOGY நரம்பியல் சிகிச்சை
  25. NEUROSURGERY நரம்பியல் அறுவை சிகிச்சை
  26. OFMS வாய் வழி மற்றும் தாடை அறுவை சிகிச்சை
  27. OPHTHALMOLOGY SURGERIES கண் நோய் அறுவை சிகிச்சை
  28. ORTHOPEDIC TRAUMA எலும்பியல் காயம்
  29. PAEDIATRIC INTENSIVE CARE இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை
  30. PAEDIATRIC SURGERIES குழந்தை அறுவை சிகிச்சை
  31. PAEDIATRICS குழந்தைகள் சிகிச்சை
  32. PLASTIC SURGERY ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
  33. PMR
  34. PSYCHIATRY மனநல மருத்துவ சிகிச்சை
  35. PULMONLOGY நுரையீரல் சிகிச்சை
  36. RADIATION ONCOLOGY கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை
  37. RHEUMATOLOGY முடக்கு வாதம் சிகிச்சை
  38. SPINE தண்டுவடம் சிகிச்சை
  39. STEMI இருதய நோய் / மாரடைப்பு
  40. SURGICAL GASTRO ENTEROLOGY இரைப்பை குடல் அறுவை சிகிச்சை
  41. SURGICAL ONCOLOGY புற்றுநோய் அறுவை சிகிச்சை
  42. THORACIC MEDICINE நெஞ்சக நோய் சிகிச்சை
  43. VASCULAR SURGERIES இரத்தநாள அறுவை சிகிச்சை

chief minister health insurance card download

தகவல்

Scheme Name Chief Minister's Comprehensive Health Insurance Scheme

Government State Government of Tamilnadu

Official Website https://www.cmchistn.com

Toll-Free Number 1800 425 3993

Email ID tnhealthinsurance@gmail.com

CMCHISTN Beneficiary

Android App https://play.google.com/store/apps/details?id=com.remedinet.tnbeneficiary

Chief Minister Health Insurance Smart Card

CMCHISTN Smart Card பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

  • URN Number
  • Head of Family Member Name
  • Address
  • Family Group Photo

காப்பீட்டுத்திட்டத்தின் அட்டையை பதிவிறக்கம் செய்தல்


பின்வரும் படிகளை பின்பற்றி காப்பீடு அட்டையை Download செய்யலாம்.

Step 1: முதலில் www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Enrollment என்பதற்கு கீழே உள்ள Member Search / e-Card என்பதை 'கிளிக்' செய்யவும்.

Step 3: உங்களின் Health Insurance Card இல் உள்ள URN Number அல்லது Ration Card Number இவை இரண்டில் ஏதாவது ஒன்றை Enter செய்யவும்.


Ration Card Number என்பது 20G1234567 என்ற வடிவில் இருக்கும்.

பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4: இப்பொழுது Policy Number இன் மீது கிளிக் செய்யவும்.

Step 5: தற்போது Beneficiary Details தெரிவதை காண்பீர்கள். இப்பொழுது Generate e-card என்பதை அழுத்தவும்.

Step 6: இப்பொழுது Chief Minister Comprehensive Health Insurance Card தெரியும். அதை Download செய்து பிறகு கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Similar Posts
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை தயாரிக்கும் பணி தீவிரம்..!
பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தேக்கத்தால் மக்கள் அவதி
சீராப்பள்ளி ரூ. 18.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி..!
தாளவாடி அருகே காட்டு யானைகள் ராகி பயிர் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சஞ்சய் சம்பத் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்!
அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி அடையாள கருவி பொருத்த நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதள பயிற்சி..! புதிய மாற்றங்களுக்கான அடித்தளம்..!
தமிழக அரசின் மீதான பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!
பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு போலீஸ் வலை
கோபி: அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் கோழிப்பண்ணை துவங்க லைசென்ஸ் முறை வேண்டும்: என்இசிசி கூட்டத்தில் கோரிக்கை
பாரியூர் குண்டம் விழா குறித்து ஆலோசனை..!