chief minister complaint cell address-முதலமைச்சருக்கு நேரடியாக புகார் மனு அனுப்பனுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

chief minister complaint cell address-முதலமைச்சருக்கு நேரடியாக புகார் மனு அனுப்பனுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
X
chief minister complaint cell address-பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பதற்கு ஆன்லைன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் எளிதாக மனுக்களை அனுப்பலாம்.

chief minister complaint cell address-வளர்ந்துள்ள தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப அரசு புகார் அளிப்பது போன்ற தீர்வுகளுக்கு எளிதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள சில மாற்றங்களை செய்து வருகிறது. பலர் நேரடியாக முதலமைச்சரிடம் தங்களது புகார் மனுக்களை கொடுக்க நினைப்பார்கள்.

அவ்வாறு பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள், http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்துள்ள புகார்கள் மீது என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அதேபோல், தபால் மூலம் புகார்களை அனுப்ப முகவரி தரப்பட்டுள்ளது. இந்த முகவரிக்கு தபால் மூலமாக புகார் மனுக்களை பொதுமக்கள் அனுப்பலாம்.

Chief Minister's Special Cell,

Secretariat, Chennai - 600 009. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்கள்: 044 - 2567 1764

பேக்ஸ்: 044 - 2567 6929

மின்னஞ்சல் முகவரி: cmcell@tn.gov.in

Tamilnadu Government

இமெயில் ஐடி : tncmhelpline@gmail.com

புகாருக்கான தொடர்பு நம்பர் (Toll-Free) : 1100

மேல் முறையீடு : appealcmhelpline@tn.gov.in

அலுவலக வெப்சைட் : https://cmhelpline.tnega.org/portal/en/home

முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி :

Special Officer,

முதல்வரின் முகவரித்துறை,

தலைமைச் செயலகம், சென்னை-600009.

இந்த முகவரி மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Tags

Next Story