/* */

காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சட்டசபையில் முதல்வர் அறிவித்த ரூ.700 கோடி, காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

சட்டசபையில் முதல்வர் அறிவித்த ரூ.700 கோடி, காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மோகனூர் காவிரி ஆற்றில், திரளான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்த ரூ.700 கோடி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மோகனூர் காவிரி ஆற்றில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கரூர் மாவட்டம் நெரூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 136 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக அதன் ஆய்வுப்பணிக்காக ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் சட்டசபை கூட்டத்தொடரில் நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூருக்குப் பதிலாக மோகனூரில் இருந்து திருச்சி மாவட்டம் நெரூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்தார். இதனால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் மோகனூர் தடுப்பணை திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பணை அமைக்கப்பட்டால், நாமக்கல் மற்றும் கரூர் மாவ ட்டங்களில் பல கி.மீ தூரம் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகள் பலன் பெறுவார்கள், மேலும் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், தமிழக அரசு திடீரென்று இந்த திட்டத்தை கைவிட்டதால் அனைவரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அல்லது ஒருவந்தூர் முதல், கரூர் மாவட்டம் நெரூர் வரை காவிரியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்த திட்டத்தை, கைவிடாமல், உடனடியாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி, மோகனூர் காவிரி ஆற்றில் விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் வக்கீல் செல்லராஜாமணி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். திரளான விவசாயிகள் கையில் கரும்புடனும், பெண் விவசாயிகள் கையில் முளைப்பாரிகைகளுடனும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் பெண்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி, முளைப்பாரிகைகளை காவிரியில் விட்டனர்.

Updated On: 21 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்