மருத்துவர் பரிந்துரை இன்று ரெம்டெசிவிர் மருந்து போட்டுக் கொள்ளக் கூடாது

மருத்துவர் பரிந்துரை இன்று ரெம்டெசிவிர் மருந்து போட்டுக் கொள்ளக் கூடாது
X
மருத்துவர் பரிந்துரை இன்று ரெம்டெசிவிர் மருந்து போட்டுக் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ. ராதாகிருஷ்ணன், கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்கள் சோதனை செய்து சிகிச்சை வழங்குவார்கள். மேலும் சிக்கலான தருணங்களில் 108 அல்லது 044-6122300 என்ற எண்ணை அழைக்கலாம். அதுபோல 104 என்ற எண்ணையும் அழைக்கலாம். தேவையில்லாமல் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.

மேலும், சிலர் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருத்துவர் அறிவுரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்து வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!