விவேக் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம் - முதல்வர், துணைமுதல்வர்

விவேக் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம் - முதல்வர், துணைமுதல்வர்
X

நகைச்சுவை நடிகர் விவேக் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு தற்போது எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேக் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி