விஏஓக்கள் ரூ.79 லட்சம் கொரோனா நிவாரணம்: வருவாய் அமைச்சரிடம் வழங்கினர்

விஏஓக்கள் ரூ.79 லட்சம் கொரோனா நிவாரணம்: வருவாய் அமைச்சரிடம் வழங்கினர்
X

வருவாய் அமைச்சரிடம், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர்.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.79 லட்சத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் அமைச்சரிடம் வழங்கினர்.

கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருப்பம் உள்ளவர்கள் கொரோனோ நிவாரண உதவியை வழங்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 28 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதிய தொகையான 79 லட்சம் ரூபாய் நிதியை வருவாய்துறை மூலம் நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப வலியுறுத்தி தீர்மானத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!