சமூகத்திற்கான குரல் ஓய்ந்து விட்டது - டிராபிக் ராமசாமி மறைவிற்கு சூரி இரங்கல்

சமூகத்திற்கான குரல் ஓய்ந்து விட்டது - டிராபிக் ராமசாமி மறைவிற்கு சூரி இரங்கல்
X
சமூகத்திற்கான குரல் ஓய்ந்து விட்டது என்று டிராபிக் ராமசாமி மறைவிற்கு சூரி இரங்கல் தெரிவித்தார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவை அடுத்து பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவு குறித்து நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.

சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!