சமூக நலனை குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் விவேக் - முதல்வர் இரங்கல்

சமூக நலனை குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் விவேக் - முதல்வர் இரங்கல்
X

தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூகச் சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர் என்று தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவேக் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர். தனது ஈடு இணையற்ற கலைச்சேவையாலும், சமூகச் சேவையாலும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு தமிழ்த் திரைப்படத்துறைக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

அன்னார்மறைந்தாலும், அவரது நடிப்பும் சமூகச் சேவையும் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும். விவேக்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கு திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story