விருகம்பாக்கத்தில் கார்களை சேதப்படுத்திய இளைஞர்கள் அதிரடி கைது

விருகம்பாக்கத்தில் கார்களை சேதப்படுத்திய இளைஞர்கள் அதிரடி கைது
X

அடித்து நொறுக்கப்பட்ட கார்.

விருகம்பாக்கம் பகுதியில் வாகனங்களை சேதப்படுத்திய மூன்று பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை கே.கே.நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடியை இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல் ரவுடி ஆசையில் அடித்து நொறுக்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து வளசரவாக்கம் பகுதியில் பால் வினியோகம் செய்யும் மேடவாக்கத்தைச் சேர்ந்த உமா சங்கர் (31) மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், (35) ஆகிய இருவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், (22), தங்கல் உள்வாயல் தெருவைச் சேர்ந்த அரவிந்தன், (23) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், ரவுடிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அவ்வாறு செய்ததாகக் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்