பாதுகாப்போடு பணி செய்கிறோம்: கோயம்பேடு வணிக சங்கம்

பாதுகாப்போடு பணி செய்கிறோம்: கோயம்பேடு வணிக சங்கம்
X

கோயம்பேடு காய்கறி வணிக வளாக நலச்சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் செய்தியாளர் சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, கோயம்பேடு காய்கறி அனைத்து வளாகங்களிலும் வியாபாரிகள் தொழிலாளர்கள் பணியாட்கள் கொள்முதல் செய்ய வருகின்ற வெளி மார்க்கெட் மற்றும் புறநகர் வியாபாரிகள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் அனைவருக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அவர்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கப்படுகிறது.

கோயம்பேட்டில் உள்ள அம்மா கிளினிக்கில் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் பாதுகாப்போடு பணி செய்து கொண்டிருக்கிறோம். நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். கொரோனாவால் காய்கறிகள் விலை ஏறவில்லை விலை வீழ்ச்சிதான்அடைந்துள்ளது, மக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாத வகையில் நாங்கள் காய்கறிகளை வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!