காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் அடக்கம் - தமிழக அரசு

காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் அடக்கம் - தமிழக அரசு
X

நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின் போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது. தேர்தல் நடைமுறை உள்ளதால் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் அரசின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூகச் சேவையை கவுரவிக்கவே அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட இருக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!