டாஸ்மாக் கடைகளின் நேரம் விரைவில் குறைக்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகளின் நேரம்  விரைவில் குறைக்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி
X
மருத்துவ வல்லுனர்களின் கருத்துகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளின் நேரம் விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இதுவரை 26384 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

மேலும் 60777 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 12000 விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்

வருகிற மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்து விடும் என தெரிவித்தார்.

8905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.

சென்னையில் வட கிழக்கு பருவ மழையால் மழை நீர் தேங்கும் 1,430 இடல்கள் கண்டறியப்பட்டு அங்கு ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டு 341 இடங்களில் மின் இணைப்புக்கான பில்லர் பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மீதமுள்ள 1079 பில்லர் பாக்ஸ் மார்ச் மாததிற்குள் உயர்த்தப்படும். இதன்மூலம் சென்னையில் மழை காலங்களில் மழைநீர் தேங்கினாலும் பொது மக்களுக்கு மின் இணைப்பு தடையின்றி கிடைக்கும் என தெரிவித்தார்

தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெற்று புதிய பாதையில் பயணித்து வருகிறது என்றும்

தமிழ்நாடு மின்சார ஆணையம் முழுவதும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது 3 கோடியே 22 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்பு தாரர்களின் அலைபேசி எண்கள் மட்டுமே கடந்த மே மாதம் வரை பெறப்பட்டு உள்ளது . ஆனால் தற்போது 2 கோடியே 99 லட்சம் மின் இணைப்பு தாரகளின் அலைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளது.

மின் மாற்றியில் பொருத்தும் டி டி மீட்டர் பொறுத்துவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் வயர்கள் அறுந்து விழும் பட்சத்தில் தானாகவே ட்ரான்ஸ் பார்மரிலிருந்து மின்சாரம் தானாகவே துண்டிக்க கூடிய வகையில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது இதன் மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்படும்..

எனவும் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தும் பணி துவங்கும். இதன்மூலம் ஒரு சதவீத மின் இழப்பு தடுக்கப்படும் எனவும் இதனால் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் அரசுக்கு செலவு குறையும் என தெரிவித்தார்

மின் வாரியத்தில் காலிபணியிடங்கள் தொடர்பான கணக்கீடு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்த பணியாளர்கள் என முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு , பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்யப்படும்

கோடை காலத்தில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் ஆய்வு செய்யபட்டு மதிப்பீடுகள் கோரப்பட்டுள்ளது

குறிப்பாக சென்னையில் 10 இடங்கள் கண்டறியப்பட்டு , உயர்த்தும் பணிகள் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் வரும் ஆன்டிற்குள் 100 விழுக்காடு மின் கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றபடும்.

மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் நேர குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!