சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற 3 பேர் கைது
X

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த அமெரிக்க டாலர்கள்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு அமெரிக்க டாலரை கடத்த முயன்ற 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பெருமளவு கணக்கில் இல்லாத வெளிநாட்டுப்பணங்கள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 127 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 3 பயணிகள் ஒரு குழுவாக இந்த விமானத்தில் இலங்கை செல்ல வந்திருந்தனர். அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களுடைய கைப்பைகளை சோதித்தபோது, அந்த கைப்பைகளில் ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரகசிய அறைகளை திறந்து பார்த்தபோது, அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் கரண்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

3 பயணிகளின் கைப்பைகளில் இருந்தும் மொத்தம் ரூபாய் 55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரண்சி இருந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் 3 பேரின் பயணங்களையும் ரத்து செய்தனர். அதோடு அவர்களிடம் இருந்த கணக்கில் இல்லாத கள்ளப்பணம் ரூ.55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரண்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்து சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேருமே இந்த பணத்தை வேறு யாருக்காகவோ இலங்கைக்கு கடத்தி செல்வதாகவும், இலங்கையில் இருந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு கடத்த இருந்ததாகவும் தெரிய வந்தது.எனவே இந்த பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பிய ஆசாமி யார்?என்று தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!