கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் கலைப்பா? தமிழக அரசு விளக்கம்

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் கலைப்பா?   தமிழக அரசு விளக்கம்
X
தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை, அரசு கலைக்கப் போவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து தேர்தல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் பட்லூர் கூட்டுறவு சங்க தலைவர் உள்பட 30 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் அளித்த பதிலில், தமிழகத்தில் தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை, அரசு கலைக்கப் போவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!