பிரபாகரன் காணொளி விவகாரம்: 4 பேரை விடுதலை செய்ய வேண்டும்- சீமான் வலியுறுத்தல்!

பிரபாகரன் காணொளி விவகாரம்: 4 பேரை விடுதலை செய்ய வேண்டும்- சீமான் வலியுறுத்தல்!
X
பிரபாகரன் குறித்த தவறான வீடியோவுக்கு மறுப்பு வீடியோ வெளியிட வைத்ததாக கைதான 4 பேரை விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரன் பற்றி சமூக வலைதளங்களில் மிகவும் இழிவாகப் பதிவிட்ட நபரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி மறுப்பு காணொளி வெளியிட வைத்த நால்வரை கைது செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற தேசியத் தலைவர், பிரபாகரன் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!