தமிழகத்தில் மதுக்கடை பார்களை திறக்க அனுமதி: முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடை பார்களை திறக்க அனுமதி: முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை!
X
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை பார்கைளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை வடபழனியில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 12 மாதங்கள் பார்கள் செயல்படாமல் இருந்த காரணத்தால் ரூ.1600 கோடி ரூபாய் பார் உரிமையாளர்கள், கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதியளிக்க வேண்டும்.

இதேபோல் டாஸ்மாக் பார்கள் டெண்டர் 2 வருடங்களுக்கு மட்டுமே அரசு சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்படாமல் உள்ளதால் அதனை நீட்டித்து தரவேண்டும். உரிமை தொகையை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
ai marketing future