சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி கடத்த முயன்ற பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி கடத்த முயன்ற பயணிகள் கைது
X

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் கடத்த வைத்திருந்த வெளிநாட்டு கரன்சிகள்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற பயணிகள் 8 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு இலங்கை செல்லும் தனியாா் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த 7 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பயணிகளை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதையடுத்து பயணிகளை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை கலந்து சோதனையிட்டனா்.

அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் அமெரிக்க டாலா்,சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரண்சிகள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அவா்கள் 7 பேரிடமிருந்து ரூ.42.18 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா்.அதோடு அவா்களின் பயணங்களை ரத்து செய்து,7 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது.அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த ஒரு ஆண் பயணியை சந்தேகத்தில் சோதனையிட்டனா்.

அவருடைய சூட்கேஸ்சில் மறைத்து வைத்திருந்த ரூ.14.45 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் பணத்தை கைப்பற்றினா்.அதோடு பயணியின் பயணத்தை ரத்து செய்து,கைது செய்தனா்.

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடத்திய சோதனைகளில் ரூ.56.63 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு,வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 8 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து,விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்