வீட்டு வசதி வாரிய தலைவராக பூச்சி முருகன் பொறுப்பேற்பு
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள CMDA அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொன்றார்.
திமுக தலைமை செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று கோயம்பேடு CMDA அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன் கூறியதாவது :
வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு வணக்கம் தமிழக முதல்வருக்கும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
கடந்த ஆறு மாதங்களாக கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்யும் பணியை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகி்ன்றனர். அவர்களுடன் துணை நின்று என் பணிகளை மேற்கொள்ளுவேன் என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி
சென்னையில் 193 இடங்களில் இருக்க கூடிய வாடகை குடியிருப்புகளில் 60 இடங்களில் வீடுகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவற்றை அனைத்தும் சரி செய்யும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னை பட்டிணம்பாக்கத்தில் புதிதாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்பில் மிக சிறப்பான கட்டிடம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu