தமிழகத்தில் மழை பெய்யும் இடங்கள் குறித்து வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மழை பெய்யும் இடங்கள் குறித்து வானிலை மையம் தகவல்
X

பைல் படம்

தமிழகத்தில் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

26.07.2021, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

27.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

28.07.2021 முதல் 29.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், தேனி திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் நிலவக் கூடும்

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சோலையாறு (கோவை) 9, சின்னக்கல்லார் (கோவை) 7, வால்பாறை (கோவை) 6,சின்கோனா (கோவை) 5, ஏற்காடு (சேலம்) 4, பந்தலூர் (நீலகிரி) 3, சித்தார் (கன்னியாகுமரி) 2 , பெரியாறு தளி (கிருஷ்ணகிரி)தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல் பகுதிகள்:

25.07.2021, 26.07.2021: தெற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

27.07.2021 முதல் 29.07.2021 வரை தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

அரபிக்கடல் பகுதிகள்:

25.07.2021 முதல்27.07.2021வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது