சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நடந்த நுரையீறல் மாற்று அறுவை சிக்சை குறித்து மருத்துவர்கள் பேட்டி அளித்தனர்.
வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் கோவிந்த் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் குழு பஞ்சாப்பை சேர்ந்த 34 வயது நோயாளிக்கு மரபு ரீதியாக ஏற்படும் மிக அரிதான நுரையீரல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது.
இந்த அரிதான மற்றும் சவாலான அறுவை சிகிச்சை ஏழு மணி நேரம் நீடித்தது. குறைவான பிஎம்ஐ. சிறு மார்புக் குழி மற்றும் நுரையீரலின் இரு பக்கங்களிலும் பல மார்புக் குழாய் செருகல்கள் உள்ளிட்ட பல சவாலான சுகாதாரப் பிரச்சினைகள் நோயாளிக்கு இருந்த போதும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
நுரையூரில் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் நோயாளிக்கு தினமும் 12 லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டதாகவும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தானாகவே மூச்சு விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu