தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் பாராட்டு
X
காவலர்களுக்கு வார விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவல் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை, பிறந்தநாள் ,திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், இன்று பதிவிட்டதாவது 'தமிழக காவல்துறையின் நீண்ட நாள் கோரிக்கையேற்று வாரத்தில் ஒருநாள், மேலும் பிறந்தநாள் ,திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்கள்.' என்று இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story