நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்

நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்
X

பைல் படம்.

விருகம்பாக்கத்தில் மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை கடத்தி, நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துகுமரன் (40). இவர், தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன், சிலர் இவரை கடத்தி அறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக முத்துகுமரன், விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கத்தில் பதுங்கி இருந்த மதுரையைச் சேர்ந்த ரவுடி கணபதி (35), என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில், முத்துகுமரன் ரயில்வேயில் ஒப்பந்த பணிகள் வாங்கி தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டோர், கூலிப்படையை வைத்து முத்துகுமரனை கடத்தி சென்று நிர்வாணமாக வீடியோ எடுத்து, பணத்தை திரும்பத்தர கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. முத்துகுமரன் உண்மையாகவே பணம் பெற்று ஏமாற்றினாரா அல்லது கடத்தல் சம்பவம் உண்மையா என்பது குறித்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்