காவல்துறை சோதனையில் டிக்கெட் நகலை கையில் வைத்திருக்க அறிவுறுத்தல்
ஊரடங்கில் ஆய்வில் ஈடுபட்ட போலீசார்.
தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கரோனா தொற்றால் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில் இன்று ரயில் மற்றும் விமானம் மூலம் வெளியூர் செல்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பொதுமக்கள் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு ஆட்டோ அல்லது டாக்ஸில் செல்ல முன்பதிவு டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ரயில் நிலையம் அல்லது விமான நிலையம் அழைத்துச் செல்லும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளிடம் அவர்கள் மேற்கொள்ளும் ரயில் அல்லது விமானப் பயணத்தின் டிக்கெட் நகலை போட்டோ எடுத்து வைத்திருக்கும்படியும் பயணிகளை ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்தில் இறக்கி விட்டு வரும்போது ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் காவல்துறை வாகனத்தை தணிக்கையின் போது அந்த டிக்கெட்டுகளை காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவல் குழுவினர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர் காண்பிக்கும் டிக்கெட் நகலினை சோதனை செய்து அதில் குறிப்பிட்டிருக்கும் தேதி,நேரம் மற்றும் வழித்தடங்களை ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே ஆட்டோ டாக்சி செல்ல அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியத் தேவை இன்றி அல்லது போலியான டிக்கெட் நகல் வைத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எசரிக்கை விடுக்கப்படுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu