ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.. மத்திய அரசிற்கு த.மா.கா வலியுறுத்தல்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.. மத்திய அரசிற்கு த.மா.கா வலியுறுத்தல்
X

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் 

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரி இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே விவசாயிகளின் நியாமான அச்சத்தை போக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!