பாலியல் வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம்

பாலியல் வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம்
X
பாலியல் வழக்கில் கைதான சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புகார் தொடர்பாக அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 10க்கும் அதிகமான புகார்கள் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில், பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்து, சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!