வேதா நிலையம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

வேதா நிலையம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பரபரப்பு பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் குறித்த கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்தார்.

வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

சுமார் 4 மணி நேரம் நடைப்பெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது..குறிப்பாக, அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..அதேப்போல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைப்பெற உள்ள நிலையில், மாபெரும் வெற்றி பெறுவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், திமுக ஜனநாயக விரோத அரசு என்றும், மாநில தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதனை முறியடித்து அதிமுக வெற்றி பெற வேண்டும் என கருத்துக்கள் பகிரப்பட்டதாக கூறினார்.

மேலும், வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பதிலளித்த அவர், அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களின் திருக்கோவிலாக நினைக்கும் இடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மாபெரும் எக்கு கோட்டை எனவும், உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள் என குறிப்பிட்ட அவர்,

வியாபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் உள்ளதோ,அந்த குளத்தை நோக்கி செல்வார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.அன்வர் ராஜா குறித்த கேள்விக்கு..கட்சிக்குள் கருத்து பரிமாற்றம் இருக்கும், அதற்கு வருத்தம் தெரிவிப்பது இயல்பு தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!