சென்னை எம்ஜிஆர் நகரில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா

சென்னை எம்ஜிஆர் நகரில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா
X

எம்ஜிஆர் நகரில் நடந்த மின் சிக்கனம் வார விழாவில் மினி ஊழியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

சென்னை எம்ஜிஆர் நகரில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மின்வாரிய அலுவலக ஊழியர்கள் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் கீதா கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தேசிய மின்சார சேமிப்பு வாரம் மற்றும் பாதுகாப்பு வார விழா மின்சார வாரியம் மூலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை கொண்டாடும் விதமாக பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி,பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகளை வழங்க பட்டது. பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்பதற்காக மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பட்டது.

மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதனால் பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து மின்சாரத்தை சேமித்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே இரவு நேரத்தில் மின்சாரம் தடை செய்ய படுகிறது.தகவல் அறிந்த உடன் மின்சார ஊழியர்கள் உடனடியாக வந்து சரி செய்து விடுவார்கள் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business