விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ ஏஎம்வி.பிரபாகர்ராஜா இரத்த தானம்

விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ ஏஎம்வி.பிரபாகர்ராஜா இரத்த தானம்
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி எம்எல்ஏ பிரபாகர் ராஜா ரத்ததானம் செய்தார்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த விழாவில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா ரத்ததானம் செய்தார்.

:திமுக இளைஞரணி செயலாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கில் விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா ஏற்பாட்டில் சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமை துவக்கி வைத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஎம்வி.பிரபாகர ராஜா முகாமை பார்வையிட்டு பின்னர் தானும் இந்த முகாமில் பங்கெடுத்து இரத்ததானம் செய்தார்,

இளைஞர் எழுச்சிநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த மாபெரும் இரத்ததான முகாமில் இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் ஆர்வமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர்.,

இந்த நிகழ்ச்சியில் கலைஞர் நகர் பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் உ.துரைராஜ், தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
ai as the future