நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தக்கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் மனிதச்சங்கிலி

நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தக்கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் மனிதச்சங்கிலி
X

சென்னை உயநீதிமன்ற வளாகத்தின் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடத்திய ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தினர்.

ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற்று வரக்கூடிய காரணத்தினால், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி போராட்டம்

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தவேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தி ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோணா தொற்று காரணமாக நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற்று வரக்கூடிய காரணத்தினால், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயநீதிமன்ற வளாகத்தின் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னை உயநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. டாஸ்மாக், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயக்கும் போது, நீதிமன்றங்களில் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி மறுப்பது ஏன்?

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மறுக்கப்பட்டதாலும், 2020 முதல் 2022 வரை நீதிமன்றங்கள் மூடியதாலும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பாதிக்கபட்ட வழக்கறினர்களுக்கு தமிழக அரசும், பார் கவுன்சிலும் 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!