சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X

சென்னை கோட்டூர் புரத்தில் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.

தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், நேற்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை 1,57,76,550 தடுப்பூசி வந்துள்ளது என்றும், அதில் 1,56,74,489 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நேற்று தான் 4 லட்சம் அளவிற்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் தற்போது 2 லட்சம் அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக கூறிய அமைச்சர், மத்திய அரசிடம் இருந்து இன்றோ, நாளையோ தடுப்பூசி வரும் என்றார். அதுமட்டுமின்றி இந்த மாதம் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இதுவரை 10 லட்சம் தடுப்பூசி வந்துள்ளதாகவும், மீதமுள்ள 61 லட்சமும் தொடர்ந்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் 2 இடங்கயில் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், 25 நாட்களுக்களில் அமையும் என்று கூறினார். அதேபோல் மற்றொன்று, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் மையத்தை மேம்படுத்தி 15 நாட்களில் பரிசோதனை அமைக்கப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில் கோவாக்சின் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எந்த தடுப்பு மருந்தை அளித்தாலும் அதனை பிரித்து அனுப்பப்பட்டு வருவதாகவும், கோவாக்சின் 2ம் டோஸ் செலுத்தி கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான மருந்து உள்ளது என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil