விமானத்தில் கொரோனா நோயாளி: பயணிகள் அதிர்ச்சி

விமானத்தில் கொரோனா நோயாளி: பயணிகள் அதிர்ச்சி
X

சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் இன்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை 9 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.விமானத்தில் 85 பயணிகள் இருந்தனா். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது அதில் பயணம் செய்த ஹைதராபாத்தை சோ்ந்த ஒரு ஆண் பயணி ஒருவா் அதிகமான இருமல்,சளி தொல்லையால் பதிப்பட்டார். இதையடுத்து சகபயணிகள் சந்தேகப்பட்டு விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனா்.

உடனடியாக விமான பணிப்பெண்கள் அந்த பயணியை விசாரித்தனா். அதோடு அவரிடம் உள்ள கொரோனா பரிசோதனை சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தனா். அதில் அந்த பயணிக்கு கொரோனா பாசிடீவ் என்றிருந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த விமான பணிப் பெண்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து விமானம் விமானம் புறப்படவில்லை.

விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதோடு சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமானநிலைய அதிகாரிகள், சுகாதாரத்துறையினா் விரைந்து வந்தனா். கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான பயணியை அவசரமாக விமானத்தை விட்டு கீழே இறக்கினா். அவருக்கு கவச பாதுகாப்பு உடை அணிவித்து தனி ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சென்னை ஓமந்தூரார். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.

இதற்கிடையே விமானத்திலிருந்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்து விமான ஊழியா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். இதையடுத்து மீதி 84 பயணிகள் மற்றும் விமான ஊழியா்கள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனா். சுகாதாரத்துறையினா் கிருமிநாசினி மருந்தடித்து விமானத்தை சுத்தப்படுத்தினா். அதைப்போல் பயணிகள் அனைவரும் கிருமிநாசினி மருந்தால் தங்களை சுத்தப்படுத்தி கொண்டனா்.அதன்பின்பு விமானத்தில் பயணிகள் 84 பேரும் ஏற்றப்பட்டு காலை 10.30 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் சென்னை விமானநிலையத்தில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil